Total Pageviews

Thursday, January 6, 2011

புலம்பல் காற்று!!!

மனிதர்களே!!
நித்தம் நித்தம் வாழ வைக்கிறேன் உங்களை.....
நித்தம் நித்தம் சாக அடிக்கிறீர்கள் எங்களை....
என்பது தான் நிதர்சனம்!!!
நாங்கள் என்ன செய்தோம்
என்று வினவுவீர்கள் அசட்டுத்தனமாய்...
சாலையில் சாகடிக்கிறீர்கள் ...
தொழிற்சாலையால் தொல்லைக் கொடுக்கிறீர்கள்..
வாகனங்களால் வருத்துக்கிறீர்கள்.....
குளிர்ச்சாதனங்களால் நிலைகுலையச் செய்கிறீர்கள்...
என்று வழியில்லாமல் வலியில் வளியின் புலம்பல்...
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை 

Wednesday, January 5, 2011

தாய்

தாய்
நம்மை ஈன்று எடுத்து 
நம்மை பாதுக்காத்து 
நல் நிலமைக்கு கொண்டு வருவாள் 
நாம் அவளை துன்புறுத்தி
சுயலாபத்திற்காக அவமானப்படுத்தி
முதியோர் விடுதியல் சேர்த்துவிட்டு 
ஆனந்தம் காண்கிறோம் இக்காலத்தில்....
நம் தாயை போல தான்
பூமி தாயையும் நடத்துக்கிறோம்
அவளின் மண்வளத்தை
சுரண்டி, நச்சு மருந்துகளைத் தூவி
நம் சுயலப்திற்காக அவளையும் அழிக்கிறோம்...
அழித்துவிட்டு நாம் இயற்கையை பழிக்கிறோம்...
அழிப்பதும்,பழிப்பதும் மனிதர்களின் 
இயல்பு என்றாலும் தாயை காக்க மறந்தவன்
உயிரற்ற பொருளை விட கீழ்த்தரமானவர்கள்
தான் நாம்..................................
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை

கன்னியாகுமரி முதல் 
காஷ்மீர் வரை 
கவின்மிகு காட்சி
அதை உருவாக்குவதில்
நாம் எடுக்க வேண்டும் முயற்சி
மறைகள் இல்லையெனில் 
மனிதனுக்கு பங்கமில்லை 
மரங்கள் இல்லையெனில் 
நாம் வாழ்வதற்கு 
பூமியில் அங்கமில்லை...
மரம் வளர்ப்போம் 
பாசத்திற்குரிய அடுத்த தலைமுறைக்காக....
பசுமையாக்குவோம் பூமித் தாயை பாதுக்காக.....
 - முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Kashmir To Kanyakumari: You too can - Become an Author of this Blog!

Kashmir To Kanyakumari: You too can - Become an Author of this Blog!

"Forest should be created for Rest"- Muralikrishnan Chinnadurai